கோலாலம்பூர், மார்ச் 12 – மலேசியாவை, அங்கீகரிக்கப்பட்ட உலக e-sports மையமாக உருவாக்கும் பெரு முயற்சியில், மலேசிய தொழில்முனைவர் மின்னணு விளையாட்டுச் சங்கம் ( MEEA ) 12 நாடுகளுடன் ஒத்துழைக்கவிருக்கிறது.
மலேசியாவில் ‘Balena E-Sports’-சை அறிமுகப்படுத்த வகைச் செய்யும் அந்த ஒத்துழைப்பு மீதான உடன்படிக்கை, முன்னாள் சுற்றுலா அமைச்சர் தான் ஸ்ரீ அப்துல் காடிர் ஷேய்க் ஃபாட்சில் முன்னிலையில் முடிந்த மார்ச் 9 ஆம் தேதி கையெழுத்தானது.
300க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான E-Sports சந்தாதாரர்களைக் கொண்ட 12 நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் மலேசியாவில் E-Sports Hotel தொழில்துறையை மாற்றுவதை இந்த புரட்சிகர நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் மின்னணு விளையாட்டுத் ( e-sports) துறையை மேம்படுத்துவதே அதன் முதன்மை நோக்கம்; அதோடு, e-sports-சை உலகளவில் விளம்பரப்படுத்தி, அதன் வாயிலால மலேசியாவின் அந்தஸ்தை வலுப்படுத்தவும் தாங்கள் எண்ணம் கொண்டிருப்பதாக, MEEA தலைவர் Baze Yeoh கூறினார்.
இது வேலை வாய்ப்புத் துறைக்கு பரந்த வாய்ப்புகளை உருவாக்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கவும் உதவும் என்றார் அவர்.
அடுத்து வரும் ஈராண்டுகளில் 3 நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றம் செய்துக் கொள்ளும் திட்டம் இருப்பதாகவும் Baze Yeoh சொன்னார்.